முகப்பு தமிழ்நாடு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.75,000 வரை முழு தள்ளுபடி; தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு

பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.75,000 வரை முழு தள்ளுபடி; தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு

by Tindivanam News

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும், ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்றிருந்தாலும், ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணமாக கருதப்படுகிறது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  வாய் வித்தை வேண்டாம், செயலில் காமியுங்கள் - நடிகர் விஜய் அறிவுரை

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole