முகப்பு திண்டிவனம் திண்டிவனம் நேரு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்; நடவடிக்கை கோரும் பொதுமக்கள்

திண்டிவனம் நேரு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்; நடவடிக்கை கோரும் பொதுமக்கள்

by Tindivanam News

திண்டிவனம் நகரின் முக்கிய சாலையான நேரு வீதியில், பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுவதால், நேரு வீதியும் தாலுகா அலுவலக சந்திப்பும் பரபரப்பாக காணப்படுகின்றன.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் இல்லாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமமடைந்து வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  "சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகி உள்ளேன்"

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole