மயிலம் அருகே உள்ள சித்தாமூர் கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
வெளியனூர், கள்ளக்கொளத்தூர், சித்தாமூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, மருத்துவம், அரசு அலுவலகங்கள் மற்றும் சந்தை தேவைகளுக்காக மயிலம், திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நேரடி பேருந்து வசதி இல்லாததால் பலர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி நேரங்களில் மாணவர்கள் நடந்தே பள்ளிக்குச் செல்லும் சூழல் நிலவுவதால், திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக தென்கோடிப்பாக்கம் வரை அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.